skip to main |
skip to sidebar
பாடுவது ஆயிரம் பாடலாக இருந்தாலும்...அங்கேதேடுவது உன்னை மட்டும் தான்.ஓடுவது ஆயிரம் பாதையில் என்றாலும்...அங்கே ஒதுங்குவது உன் நிழலில் மட்டும் தான்.ஆறுகள் ...பல பாதைகளில் வரலாம்.ஆனால்...என் 'ஆறுதல்' என்பதுஉனது பாதையில் மட்டுமே வரும்.நான்...இசையை ரசிக்க ஆரம்பித்த போதுஎன் வாழ்க்கை...இன்பமானது.நான் உன்னை ரசிக்க ஆரம்பித்த போதுஎன் வாழ்க்கையே' இசை' ஆனது! - யாழ் சுதாகர்
LINK
RADIO PROGRAMMES OF YAZH SUDHAKAR
'எண்கள்'...மனிதனை பாதிக்கின்றனவாம்.எண் ஜோதிடர்கள் சொல்கின்றார்கள்.என்னை பாதித்தவை...எண்கள் அல்ல.உனது கண்கள்!- - -மூன்றாம் பிறையைப் பார்த்தால்நல்லதாமே?எனக்கு...உன் நெற்றியைக் காட்டு!- யாழ் சுதாகர்
நான் எழுதியிருந்தாலும்
நான் பார்த்துப் பார்த்துப்
பிரமித்துப் போகும்
ஒரே கவிதை...
'நீ'...மட்டுமே!
ஆயிரம் ஆயிரம் கவிதைகளைநான் படித்திருந்தாலும்படிக்க படிக்க சலிப்புத் தராதஒரே கவிதை...உனது புன்னகை மட்டுமே!- - -நீ...சிரித்துக் கொண்டேஇருக்க வேண்டும்.அப்போது தான்என்னைச் சுற்றிச் சுற்றிப்பறந்து கொண்டிருக்கும்'விரக்தி' என்ற பருந்துவெருண்டோடும்.உனக்குத் தெரியுமா?எனது கவிதை வங்கியில்உனது புன்னகைகளையேஅதிகமாக நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.புன்னகையில் நீகஞ்சத் தனம் காட்டாத வரைகவிதைகளில் நான் கர்ணனாக இருப்பேன்.- யாழ் சுதாகர்
நான் நிலவைப் பார்க்க
நாடி வந்த போதெல்லாம்
'இன்று அமாவாசை என்று உனக்குத் தெரியாதா?'
என்று வானம் அனுதாபப்பட்டது.
நான் கோயில் வாசலை நெருங்கிய போதெல்லாம்அர்ச்சகர் நடை சாத்தி விட்டுஅவசர அவசரமாகவெளியே கிளம்புவது தெரிந்தது.என் மீது விழுந்த மாலைகள் கூடவாசம் துறந்த நாட்பட்ட மாலையான பின்பேஎன்னை வந்து சேர்ந்தன.சொற்பொழிவுக்கு போன போதெல்லாம்கூட்டம் எழுந்து செல்லும் கடைசி நேரத்திலே தான்நான் பேச அழைக்கப்பட்டேன்.பழக் கடைப் பக்கம் போனாலும் கூடவண்டு துளைத்த பழங்களுக்கேநான் வாடிக்கையாளனாக இருந்தேன்.உயிரைக் கொடுத்து நான்உழைத்த போதெல்லாம்...எனக்குப் பக்கத்திலேஉழைக்கும் நேரத்தில்உறங்கிக் கொண்டிருந்தவனுக்குக்கிடைத்த மரியாதையில்பாதி கூட எனக்குக் கிடைக்கவில்லை.எனது புயல்கள் எல்லாம்எதிர் பாராத விதமாக ஒரு நாள்தென்றலாய் மாறின.நான் கண் மலர்ந்து பார்த்த போது...எனது முட் படுக்கை....மலர்ப் படுக்கையாகமனம் மாறியிருந்தது.முதன் முதலாகஎனது கிழக்கில் சூரிய விளக்கைப் பார்த்துகண் கூசினேன்.கோட்டான்கள் மட்டுமேஅவலக் குரல் எழுப்பியஎனது நந்தவனத்தில்முதன் முதலாககுயில்களின் பாட்டு.நான் உங்களைக் காதலிக்கிறேன்'என்று நீ சொன்ன வார்த்தைகளுக்கு....இத்தனை சக்தியா !?......- யாழ் சுதாகர்
முன்னழகால்என் மனதில் பந்தடித்தாய்.கண்ணழகால்பொன் கவிதை சிந்த வைத்தாய்...பின்னழகால்என் இமைகளை நிற்க வைத்தாய்...நடை அழகால்என் இளமை சொக்க வைத்தாய்.- யாழ் சுதாகர்
பெண்ணுக்குள் இருக்கும் வினோதங்கள் அறியஆர்வத்தை ஊட்டுகின்றாய்...கண்ணுக்குள் புகுந்து நெஞ்சுக்குள் நுழைந்து...கலவரம் மூட்டுகின்றாய்!- யாழ் சுதாகர்
விஷம் என் தலைக்கு ஏறியது.அவளுக்கு...பாம்புக் கூந்தல்!- யாழ் சுதாகர்
சிரித்தாள்...என் ஒரு வருட டயரி...ஒரே நாளில் தீர்ந்தது ! ஆமாம்.....டயரியின் அத்தனை பக்கத்திலும்...அவள்... முத்து முத்துப் புன்னகையைக்கவிதைகளாய்பதிவு செய்தேன்.- யாழ் சுதாகர்
இனியவளே !- - - ------------கடிகாரம் அணிவதைநான் நிறுத்தி விட்டதைஅறிவாயா நீ?என் காலத்தின்ஒவ்வொரு நொடியையும்என் காதல் தேவதையே...நீ நினைவூட்டுவதால்...என் மன அரங்கில்உனது வருகையின் பின்...கடிகாரம் என்பதுதேவையற்ற பொருள்ஆனதடி!'முட்கள்' மட்டுமே அடர்ந்திருந்தஎன் வாழ்க்கைக் காலத்தை...கடிகாரத்தின் 'முட்கள்'சுட்டிக் காட்டிய நேரங்கள்எனக்கு உணர்த்துகின்றனவோ என்றுஒரு காலத்தில் நான் எண்ணியதுண்டு!ஆனால்...இன்றுஉனது 'சொற்கள்' காட்டும் நேரங்கள்...உன்னால் ஆசீர்வதிக்கப்பட்டஎன் ராசியான நேரங்களைஎனக்கு ஞாபகப்படுத்துதடி!!கடிகாரத்தின் மணியோசையைக்கேட்கும் போதெல்லாம்...எனது வாழ்க்கையில்அடிக்கடி ஒலித்துக் கொண்டிருந்தஅபாய மணியோசையையேஅது எனக்கு ஞாபகப்படுத்தியது!ஆனால்...உனது வருகைக்குப் பின்...உன் கொலுசு மணியோசை ஒன்றே எனக்குகோயில் மணியோசையாகஒலிக்குதடி!- யாழ் சுதாகர்yarl suthahar,yarl suthakar,yarl suthagar,yarl sudhakar,yaal suthakar,yaal suthahar,
yaal sudhakar,yazh suthahar,yazh suthagar,yazh sudhakar,yaazh sudhakar,
yaazh suthakar,yaazh suthahar,yal sudhakar,yal suthakar,yal suthakar,yal suthagar,
tamil poems, kavithaikal,kavithaigal,tamil internet radioyaalppaanam suthakar,
yalpanam suthakar,yaalppaanam sudhakar,yalpanam sudhakar,yarlsuthahar,yarlsuthakar,yarlsuthagar,yarlsudhakar,yaalsuthakar,
yaalsuthahar,yaalsudhakar,yazhsuthahar,yazhsuthagar,yazhsudhakar,
yaazhsudhakar,yaazhsuthakar,yaazhsuthahar,yalsudhakar,yalsuthakar,
yalsuthakar,yalsuthagar,yaalppaanamsuthakar,yalpanamsuthakar,
yaalppaanamsudhakar,yalpanamsudhakar