ஆத்மார்த்தமான காதலை...மாசற்ற பிரேமையைப் பிரதிபலிக்கும் சின்னச் சின்னக் கவிதைகள்.PART-2

Saturday, February 25, 2006

இனியவளே...


இனியவளே !
- - - ------------
கடிகாரம் அணிவதை
நான் நிறுத்தி விட்டதை
அறிவாயா நீ?

என் காலத்தின்
ஒவ்வொரு நொடியையும்
என் காதல் தேவதையே...நீ நினைவூட்டுவதால்...
என் மன அரங்கில்
உனது வருகையின் பின்...
கடிகாரம் என்பது
தேவையற்ற பொருள்ஆனதடி!

'முட்கள்' மட்டுமே அடர்ந்திருந்த
என் வாழ்க்கைக் காலத்தை...
கடிகாரத்தின் 'முட்கள்'சுட்டிக் காட்டிய நேரங்கள்
எனக்கு உணர்த்துகின்றனவோ என்று
ஒரு காலத்தில் நான் எண்ணியதுண்டு!

ஆனால்...இன்றுஉனது 'சொற்கள்' காட்டும் நேரங்கள்...
உன்னால் ஆசீர்வதிக்கப்பட்ட
என் ராசியான நேரங்களை
எனக்கு ஞாபகப்படுத்துதடி!!

கடிகாரத்தின் மணியோசையைக்
கேட்கும் போதெல்லாம்...
எனது வாழ்க்கையில்
அடிக்கடி ஒலித்துக் கொண்டிருந்த
அபாய மணியோசையையே
அது எனக்கு ஞாபகப்படுத்தியது!

ஆனால்...உனது வருகைக்குப் பின்...
உன் கொலுசு மணியோசை ஒன்றே எனக்கு
கோயில் மணியோசையாகஒலிக்குதடி!

- யாழ் சுதாகர்

yarl suthahar,yarl suthakar,yarl suthagar,yarl sudhakar,yaal suthakar,yaal suthahar,
yaal sudhakar,yazh suthahar,yazh suthagar,yazh sudhakar,yaazh sudhakar,
yaazh suthakar,yaazh suthahar,yal sudhakar,yal suthakar,yal suthakar,yal suthagar,
tamil poems, kavithaikal,kavithaigal,tamil internet radioyaalppaanam suthakar,
yalpanam suthakar,yaalppaanam sudhakar,yalpanam sudhakar,yarlsuthahar,yarlsuthakar,yarlsuthagar,yarlsudhakar,yaalsuthakar,
yaalsuthahar,yaalsudhakar,yazhsuthahar,yazhsuthagar,yazhsudhakar,
yaazhsudhakar,yaazhsuthakar,yaazhsuthahar,yalsudhakar,yalsuthakar,
yalsuthakar,yalsuthagar,yaalppaanamsuthakar,yalpanamsuthakar,
yaalppaanamsudhakar,yalpanamsudhakar

No comments: