ஆத்மார்த்தமான காதலை...மாசற்ற பிரேமையைப் பிரதிபலிக்கும் சின்னச் சின்னக் கவிதைகள்.PART-2

Saturday, February 25, 2006

உனது நிழலில்...


பாடுவது ஆயிரம் பாடலாக இருந்தாலும்...
அங்கேதேடுவது உன்னை மட்டும் தான்.

ஓடுவது ஆயிரம் பாதையில் என்றாலும்...
அங்கே ஒதுங்குவது உன் நிழலில் மட்டும் தான்.

ஆறுகள் ...பல பாதைகளில் வரலாம்.
ஆனால்...என் 'ஆறுதல்' என்பது
உனது பாதையில் மட்டுமே வரும்.

நான்...இசையை ரசிக்க ஆரம்பித்த போது
என் வாழ்க்கை...
இன்பமானது.

நான் உன்னை ரசிக்க ஆரம்பித்த போது
என் வாழ்க்கையே
' இசை' ஆனது!

- யாழ் சுதாகர்
LINK

RADIO PROGRAMMES OF YAZH SUDHAKAR

1 comment:

karthicj said...

Hi sir,
Thats a excellent one.