ஆத்மார்த்தமான காதலை...மாசற்ற பிரேமையைப் பிரதிபலிக்கும் சின்னச் சின்னக் கவிதைகள்.PART-2

Saturday, February 25, 2006

உனக்குத் தெரியுமா?


நான் எழுதியிருந்தாலும்
நான் பார்த்துப் பார்த்துப்
பிரமித்துப் போகும்
ஒரே கவிதை...
'நீ'...மட்டுமே!

ஆயிரம் ஆயிரம் கவிதைகளை

நான் படித்திருந்தாலும்
படிக்க படிக்க சலிப்புத் தராத
ஒரே கவிதை...உனது புன்னகை மட்டுமே!

- - -

நீ...சிரித்துக் கொண்டே
இருக்க வேண்டும்.
அப்போது தான்
என்னைச் சுற்றிச் சுற்றிப்பறந்து கொண்டிருக்கும்
'விரக்தி' என்ற பருந்து
வெருண்டோடும்.

உனக்குத் தெரியுமா?
எனது கவிதை வங்கியில்
உனது புன்னகைகளையே
அதிகமாக நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.

புன்னகையில் நீ
கஞ்சத் தனம் காட்டாத வரை
கவிதைகளில் நான் கர்ணனாக இருப்பேன்.

- யாழ் சுதாகர்

No comments: