ஆத்மார்த்தமான காதலை...மாசற்ற பிரேமையைப் பிரதிபலிக்கும் சின்னச் சின்னக் கவிதைகள்.PART-2

Saturday, February 25, 2006

கண்களால்..'எண்கள்'...
மனிதனை பாதிக்கின்றனவாம்.
எண் ஜோதிடர்கள் சொல்கின்றார்கள்.

என்னை பாதித்தவை...
எண்கள் அல்ல.
உனது கண்கள்!- - -

மூன்றாம் பிறையைப் பார்த்தால்
நல்லதாமே?
எனக்கு...உன் நெற்றியைக் காட்டு!

- யாழ் சுதாகர்

No comments: